Sunday, January 26, 2014

உருவரை வாழ்வு

பத்தில் பொம்மையும் படிப்பும்
இருபதில் காதலும் காமமும்
முப்பதில் பெயரும் பணமும்
நாற்பதில் குழந்தையும் குடும்பமும்
ஐம்பதில் நிம்மதியும் ஆரோகியமும்
அறுபதில் பக்தியும் பயமும்

முன்வடிவு அளிக்கும் நடுத்தர வாழ்வு
சராசரி ஆபத்து சராசரி வரவு
உருவரை மீற தேவை மெய்யறிவு
அதுவரை உன்னை நீயே படித்திரு


No comments: