Friday, April 13, 2012

காளியின் ஆட்டம்

தாகம் தணிக்க நில்லாமல் ஆடுவான்
அவாவுடன் ஒரு மோக ஆட்டம்
அச்சத்துடன் ஒரு ரோக ஆட்டம்
குருடினால் இவையாகும் அஞான ஆட்டம்
தீரா தாகம் அவனை சவமாய் சாய்க்க
காளியாடுவாள் அதன் மீது கோர தாண்டவம்!


PS: Thx to bro for the visual :)

Friday, April 06, 2012

நற்குண நிர்குண லீலை

ஆயிரம் மால்கள் சுழன்றாலும்,
கைலாய ருத்ரம் தாலா!
ஆயிரம் யுகங்கள் ஈசன் முயன்றாலும்,
வைகுண்ட சாகசம் வாரா!

இவ்வியல் புணர்ந்தோர்,
நற்குண ஹரியின் பாதம் பணிந்து
நிர்குண தாண்டவத்தில் வேடமணிந்து
செயலேதும் புரியாமல் பங்கேற்பர்!

அவரே யோகியாய் திகழ்ந்து
நற்குண நிர்குண லீலையில் மகிழ்வர்!