பலம்கொண்ட அவனும் பயமில்லா இவனும்
ஒற்றையடி பாதையொன்றில் ஓரிரவு மோதிக்கொண்டனர்
உயர்ந்தவனுக்கே பாதையென்று இருவரும் வாளெடுக்க
உயர்ந்தவன் எவனென்று காண வந்தனர் வானவர்!
முதலில் நீ என்று இவனை பார்த்து அவன் நகைக்க
பயமறியான் தன்பலம் கொண்டு அவனை தாக்கினான்
அவன் தேகம் தீண்டயதும் சீறிவந்த வாள்
தூள் தூளாய் நொருங்க திகைத்தனர் வானவர்!
பிறகு வானகம் நடுங்க வாளோங்கி அவன்
இடிபோல் இவனது இடபுறத்தில் அதை இறக்கினான்
தீண்ட எதுவுமின்றி இவன் வளபுறம் வாள் வெளியேற
இலக்கின்றி தடுமாறி தடம்புரன்டான் அவன்!
நடந்ததென்னவென்று விலங்காமல் வானவர் வியக்க
நடக்காததை எண்ணி அவன் பாதை விலகினான்
இல்லை இல்லை இவனென்று ஒருவன் இல்லை
இதையறிய பாதை பாதை பாதையென்றும் ஓன்று இல்லை
எனக்கூறி வானவர் வணங்க சென்றான் இவன்!
நிரந்தரமானவன் [தே. குமரன்]
4 years ago
No comments:
Post a Comment