தேன் இனிது
தேன் சிந்தும் இதழ் இனிது என்பர்
எதனினும் பேரினிதான
உன் யாழிசை கேளாதார்
உன் குழல் அழைத்த நொடியிலுருந்து
உன் நிழல் தரும் அமைதி தேடி
உன் பின் கோகளாய் வந்தோம்
உயிர்கொண்டும் உயிரற்றிருக்கும் அனைத்தையும்
தன்னுள் வைத்து வழி நடத்தி
பாலனம் செய்யும் கோபாலா!
நிரந்தரமானவன் [தே. குமரன்]
4 years ago
No comments:
Post a Comment