Wednesday, April 13, 2011

வாழ்வாதாரம்

பரிபூரண ஞானமும் பரிசுத்த அன்பும்


ஆணவம் வளர சொத்து குவித்து
நாடகம் பல நிகழ்த்தி பதவி பிடித்து
நில்லாமல் உழன்று குடுமபம் வளர்த்து
உலகநலம் மறந்து சுயநல ஏமாளியாய் வாழ்ந்து
வாழ்வாதாரம் அறியாமல் அலையும் மனிதா

தன்னை உணர்த்தும் பரிபூரண ஞானமும்
கறை சிறிதுமில்லா பரிசுத்த அன்பும்
பின்னிப்பிணைந்து வெளிவருமிடம் உன்னில் உள்ளது
உன் சித்தம் தெளிந்தால் உனக்கு தென்படும் அது
அதுவே மனிதவாழ்வின் என்றும் குன்றா ஆதாரம்!

No comments: