Sunday, February 16, 2014

ஞானமுங் கல்வியும்

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

ஞானமும், கல்வியும், நானறிந்த வித்தையும் பஞ்சாட்சரமே; நா கூறி வழிபடுவதும் அதனையே ; நன்னெறி காட்டுவதும் அத்திருமந்திரமேயாகும்.

-- திருவாசகம்


No comments: