Thursday, October 25, 2007

ஏமாற்றிய நிலவு

ஜன்னல் வழி வந்து
மின்னும் ஒளி தந்து
படுத்திருந்த என்னை
பார்க்க வைத்தாய் உன்னை

விளையாட வா என்று அழைத்தாய்
யாருமில்லா இடத்திற்கு இழுத்தாய்
உன்னில் மயங்கி எழுந்தேன்
உன் எண்ணம் புரியாமல் விரைந்தேன்
என்னுடன் விளையாடுவாய் என்று நினைத்திருந்தேன்
மேகங்களுடன் நீ உறவாட ஏமார்ந்திருந்தேன்

காத்திருந்தேன் காத்திருந்தேன்
மேகங்கள் விலகும் என காத்திருந்தேன்
நீ என்னை நினைப்பாய் என காத்திருந்தேன்
எனக்காக நீ வருவாய் என காத்திருந்தேன்
நேரம் அறியாமல் காத்திருந்தேன்

நேரமும் அழிந்தது
உன் எண்ணமும் புரிந்தது
என் தவறும் எனக்கு தெரிந்தது
காற்றும் என் உதவிக்கு வராததால்
உனக்கும் என் ஆசை புரியாததால்
ஏமாற்றிய உன்னை மறக்க இயலாமல்
வீடு திரும்பி படைத்தேன் இம்மடல்

10 comments:

Anonymous said...

படித்ததும் பிடித்தது மனதிற்கு
நன்பர்களுக்கு அனுப்ப எண்ணம் வந்தது மனதிற்கு
அனுப்பியதும் நன்பனுக்கு வந்தது சந்தேகம்
எழுதியது நிலவிற்கா?
அல்லது...
ஏதேனும் ஒரு பெண்ணிற்கா?!!

Anonymous said...

படித்ததும் பிடித்தது மனதிற்கு...

நன்பர்களுக்கு அனுப்ப தூண்டியது எண்ணம்
அனுப்பியதும் வந்தது நன்பனுக்கு சந்தேகம்

எழுதியது நிலவிற்கா?
அல்லது...
ஏதேனும் ஒரு பெண்ணிற்கா?!! ;)

(is this little better than the first one?!)

btw solla marandhutaen... kavidhai super... :)

Aakanksha Kalla said...
This comment has been removed by the author.
Partha said...

@ anon - nandri nandri!! no metaphors involved whatsoever :)

@ aakanksha - karupu thaan enaku pudicha color!!!

Aakanksha Kalla said...
This comment has been removed by the author.
Saravanan Mathialagan said...

hi da partha

good one..
porul pizhai onrum illai .. koncham ezhuthu pizhai thann ..

.. ennayum thamizh pesa vaithuvittai .. atharkku nandri ..

good going .

rgds.

Unknown said...

Heh partha......
its really super kavithai ....
Penn'um nilavum onru enru palar solvathaal nee yaarukaga eluthiyirunthalum it goes for both of them....

Partha said...

@sarav - what spelling mistake?? I dont see any :D plz enlighten...

@malini - thx... no metaphorical meanings intended whatsoever :) written only for the moon...

Anu said...

pul arikudhu partha...eppadi ippadi ellam ezhudhareenga??? Sooooooper....
Oru pennai parthu nilavai parthen nilavil oli illai...is that so????

Anonymous said...

som ppl write on imagination... i gues u write on experience...