வாழ்வின் எல்லைக்கு சென்றீருந்தேன்,
கண்டேன் ஞானத்தை ...
வாழ்வில் தோன்றவில்லையே ? ...
எது மறைத்தது என்னை,
தேடீனேனே உன்னை,
கண்டது வெறும் மண்ணை ...
முன் இறப்பில் தோன்றிய ஞானம்,
இப்பிறப்பில் அறிய ...
ஆசையை கலைத்து,
அகத்தினை எரித்து,
பொருளை இறையாக்கி,
இறையை வாழ்வாக்கி,
வாழ்கிறேன் என்னை.
வாழ்ந்து ..
நான் .. நானா௧ ...
நானா௧ .. நீயாக ...
அன்றும், இன்றும், என்றும் ஒன்றென ...
பிறப்பும், இறப்பும் பொய்யென ...
நேரமூம், காலமும் இன்றென ...
பெற்றென் இஞ்ஞானத்தை.
No comments:
Post a Comment