Thursday, November 15, 2007

கேட்டேன்

அச்சம் அறியா இதயம் கேட்டேன்
ஆசை அருக்கும் வல்லமை கேட்டேன்
இயற்கை நானே என்ற உணர்வு கேட்டேன்
ஈசனை எங்கும் காட்டும் பார்வை கேட்டேன்
உண்மை உறைக்கும் ஆற்றல் கேட்டேன்
ஊழ் வெல்லும் திண்மை கேட்டேன்
எண்ணம் விண்நோக்கி செல்ல கேட்டேன்
ஏக்கம் இல்லா நாள் கேட்டேன்
ஜந்தும் என் சொல் பணிய கேட்டேன்
ஒற்றுமை எங்கும் நிலைக்க கேட்டேன்
ஓயாமல் உழைத்திடும் உடல் கேட்டேன்
ஔழதம் கேட்கா யாக்கை கேட்டேன்

3 comments:

Unknown said...

Good attempt like avvai paati.....

BadhriNath said...

manathirkku vandhavai
ஏக்கம் இல்லா நாள் கேட்டேன்
naatkal [panmai] nandraaga irundhirukkum

ஓயாமல் உழைத்திடும் உடல் கேட்டேன்
udalaik keetten

ik kanna sila idangalalil thevai

Partha said...

@malini - thx
@ba3 - thx for the comments da.. will watch out for these...